மேல் மாகாண சபையின் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வரலாற்றுப் பின்னணி

13 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் தாபிக்கப்பட்ட மாகாண சபையின்  செயற்பாடுகள் 1987 ஆம் ஆண்டு 42 ஆம்; இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் IV ஆம் பிரிவின் ஏற்புகளுக்கமைய, மேல் மாகாண அரசாங்க  சேவையில் அலுவலர்களை நியமித்தல், இடமாற்றங்கள் வழங்கல், பதவி நீக்கம் மற்றும் ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவற்றை  மேற்கொள்வதற்கான மேல் மாகாண  கௌரவ ஆளுனர் தன்பால்  கொண்டுள்ள அதிகாரங்கள் மேல் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு 28 ஆம்; இலக்க மாகாண சபை திருத்தச் சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டு 42 ஆம்; இலக்க மாகாண சபை சட்டத்தின் 32(2) உறுப்புரையின் கீழ் மேல் மாகாண அரசாங்க  சேவை ஆணைக்குழு கொண்டுள்ள அதிகாரங்களில்; ஒரு பகுதி  மேல் மாகாண பிரதான செயலாளர், அமைச்சின்  செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் கையளிக்கபட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு 42 ஆம்; இலக்க மாகாண சபை சட்டத்தின் 33(1) உறுப்புரையின் அடிப்படையில்  மேல் மாகாண கௌரவ ஆளுனரினால் ஆகக் குறைந்தது மூன்று உறுப்பினர்களுக்கு குறையாத  சுயாதீனமாகச் செயற்படும் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டதுடன் தற்போது அது கௌரவ தலைவர் உட்பட ஏழு உறுப்பினர்களைக்  கொண்ட குழுவாக இயங்குகின்றது.

 

o.chart new ta.
ஏம்.ஜி .ஏ திலகரட்ன

செயலாளர்

0112-879528
ஏச்.பி.சுனில் குமாரசிறி

உதவிச் செயலாளா்

0112-879538
ஈ .ஏ.அனுஷா குமாரி

உதவிச் செயலாளா்

0112-879610
எஸ்.ஏச்.ஏ.என் .நெலும்மலீ

நிர்வாக உத்தியோகத்தர்

0112-879517
அலுவலகம் 0112-879614
தொலைநகல் 0112-879512

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

clear formSubmit